சென்னை: இந்திய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் குழு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடன வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது. கோவிட் -19 என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த பாடல், மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிவதைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, சென்னை மருத்துவர்கள் நடன வீடியோவை வெளியிட்டுள்ளனர். COVID-19 பரவலை குறைப்பது தொடர்பான இந்த விழிப்புணர்வு வீடியோ அனைவராலும் பாராட்டப்படுகிறது.


சென்னை மருத்துவர்கள் வெளியிட்ட நடன வீடியோவில், முகக்கவசத்தை பயன்படுத்துவது, தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் மூன்றாவது அலை ஏற்படக்கூடிய ஆபத்தை கருத்தில் கொண்டு, மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.



பிரபலமான தமிழ் பாடலான ஷகலக்க பேபி பாடலின் இசைக்கு ஏற்றவாறு பாடல் வரிகள் மாற்றி எழுதப்பட்டுள்ளது. சென்னை ரெலா மருத்துவமனை இந்த வீடியோவை உருவாக்கியுள்ளது. மருத்துவ மாணவரான ஹிரண்யாவால் எழுதப்பட்ட வரிகள், கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. முகக்கவசம் அணிவதற்கான தயக்கம் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பற்றி பேசுகிறது.


முகக்கவசம் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் தயங்குபவர்களுக்கான இசை எச்சரிக்கை இது. இந்த வீடியோவில் மூத்த குடிமக்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் என பலரும் முகக்கவசம் அணிய மக்களை கேட்டுக் கொள்கின்றனர்.


மருத்துவ வல்லுநர்கள் மக்களை காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துள்ளனர், அவர்கள் மக்களை எப்போதும் கவனித்துக்கொள்வார்கள். அதற்கு பதிலாக முகக்கவசத்தை சரியாக அணிவது மற்றும் தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகியவை மட்டுமே மக்களிடமிருந்து மருத்துவர்கள் எதிர்பார்ப்பது. இது தங்கள் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் காப்பாற்ற உதவும் என்று ரெலா மருத்துவமனையின் எச்.ஓ.டி டாக்டர் தீபஸ்ரீ கூறுகிறார்.


Also Read | National Doctors’ Day 2021: மருத்துவர்களின் உன்னத பணிக்கு தலைவணங்குகிறோம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR