National Doctors’ Day 2021: மருத்துவர்களின் உன்னத பணிக்கு தலைவணங்குகிறோம்

உயிர் காக்கும், உடல் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறுவதற்கான நாளாக, இன்று, ஜூலை மாதம் முதல் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 1, 2021, 01:48 PM IST
  • தேசிய மருத்துவ தினம் இன்று
  • மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறந்த நாள்
  • கொரோனா முன்களப் பணியாளர்களில் முதல்வர்கள் மருத்துவர்கள்
National Doctors’ Day 2021: மருத்துவர்களின் உன்னத பணிக்கு தலைவணங்குகிறோம்   title=

National Doctors' Day 2021: மக்களின் ஆரோக்கியத்தை பரமரிக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் மருத்துவர்களுக்கு ஜூலை முதல் நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உயிர் காக்கும், உடல் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறுவதற்கான நாளாக, இன்று, ஜூலை மாதம் முதல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
  
அதிலும், இந்த கொரோனா என்ற கொடும் பெருந்தொற்று உலகையோ அசைத்து பார்த்திருக்கும் காலகட்டத்தில் உயிர்காக்கும் பணியில் தன்னலமற்ற தியாகத்துடன் பணியாற்றும் மருத்துவர்களின் சேவை, அவர்களை மனிதர்களில் உன்னதர்களாக மாற்றுகிரது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த கடினமான காலங்களில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தனிச்சிறப்பு பெற்ற நாள் இன்று.  

Also Read | IMA on COVID-19 2nd wave: கோவிட் இரண்டாம் அலைக்கு 798 மருத்துவர்கள் பலி

சிறந்த மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் (Dr Bidhan Chandra Roy) பிறந்த நாளன்று மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகங்களுக்கு மருத்துவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் நாளான இன்று மருத்துவர் பிதன் சந்திர ராயின் நினைவு நாள் என்பதும் குறிப்பிடதக்கது.   

கடினமான காலங்களிலும் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். இந்த உன்னத தொழிலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

 

நம்முடைய மருத்துவர்களின் தன்னலமற்ற முயற்சிகள் மற்றும் மனிதகுலத்திற்கான பங்களிப்புக்காக நன்றி தெரிவிக்கும் நாளான இன்று, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் ஓங்கி ஒலிக்கிறது.

இன்று மருத்துவப் படிப்பு என்பதே சாதாரண  மக்களுக்கு கானல்நீராக இருப்பதும், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தொடர்பாக எழும் சிக்கல்களும் கவலையளிக்கின்றன. மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் தங்கள் சேவையைத் தொடர அவர்களின் மனநிம்மதியை அரசு உறுதி செய்யவேண்டும். 

Also Read | டெல்டா ப்ளஸ் வைரஸ், தடுப்பூசி செயல்திறனை குறைக்குமா; அரசு கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News