சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் அதிரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை (COVID-19) கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  சென்னை (Chennai), செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது எனக் கூறினார். 



தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 8.71 லட்சம் பேர் பாதிப்பு. இதுவரை 12,630 பேர் உயிரிழப்பு. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு 9,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


ALSO READ | Corona Vaccination: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி. ஏப்ரல் 1 முதல் விதிகளில் மாற்றம்


அதேபோல சென்னையில் இன்று ஒரேநாளில் 633 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்தனர். தற்போது சென்னையில் சென்னையில் 3,751 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றனர். இதுவரை 2.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். 


பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஏப்ரல் 01 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கை மிக வேகமாக நடைபெறுகிறது. 


நாட்டில் கொரோனா தடுப்பூசி (COVID Vaccine) போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி போடும் மையங்களில்  கூடும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேர தடுப்பூசி போட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் இப்போது எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கொரோனா தடுப்பூசி பெற முடியும்.


இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது எனவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | இந்த மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கு, 1 நாளில் 24,645 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR