சென்னையில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு.. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்....  தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 
அதில், ஒருவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னையுடன் கொரோனா பாதித்த 70 வயது முதியவர். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இநத சூல்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 90 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளது. 


கொரோனா பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களில் 3 வயது பெண் குழந்தை மற்றும் 4, 5, 7 வயதுடைய ஆண் குழந்தைகள் 3 பேர். இன்று மட்டுமே 10 வயதுக்கு உட்பட்ட 4 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. தருமபுரியில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.


மேலும் 54 பேருக்கு கொரோனா - மாவட்டம் வாரியான முழு விவரம்...


  1. செங்கல்பட்டு – 1

  2. சென்னை – 27

  3. தர்மபுரி – 1

  4. திண்டுக்கல் – 3

  5. மதுரை – 2

  6. நாமக்கல் – 4

  7. ராமநாதபுரம் – 1

  8. சேலம் – 5

  9. தென்காசி – 1

  10. தஞ்சாவூர் – 1

  11. திருநெல்வேலி – 1

  12. திருப்பத்தூர் – 1

  13. திருப்பூர் – 1

  14. திருவாரூர் – 1

  15. விழுப்புரம் – 1

  16. விருதுநகர் – 3


இதை தொடர்ந்து, தமிழகத்தில் தற்போது வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23,303. அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 106. கொரோனா வைரஸ் குறித்து 23 அரசு ஆய்வகங்கள் மற்றும் 11 தனியார் ஆய்வகங்கள் என சுமார் 34 ஆய்வகங்களில் சோதனை  மேற்கொண்டு வருக்கின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் 6,954 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சுமார் 90 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் 29 பேரும், கோவை ESI மருத்துவமனையில் 27 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 20 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிக்கிசையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 908" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.