கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளன.
12 முதல் 17 வயதுடையவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு பாதுகாப்பாக இருப்பதால், குழந்தைகளுக்கு ஃபைசரின் தடுப்பூசியை அமெரிக்க மருத்துவர்கள் அங்கீகரித்துள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள சுகாதார அமைப்புகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவியல் சான்றுகளை பரிசீலிக்க திட்டமிட்டுள்ளன. உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் மீண்டும் பரவுவது அதிகரித்து வரும் நிலையில், SARS-CoV-2 வைரஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதித்து வருவதை விஞ்ஞானிகள் கவனித்து உள்ளனர். இந்த வைரஸால் குழந்தைகளுக்கு கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும், கோவிட் நோயால் உயிர் இழக்கும் சதவிகிதமும் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்தாலும், கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ALSO READ | Omicron: தில்லியில் கிரிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுபாடுகள்..!!
அமெரிக்காவில் 12 முதல் 17 வயதுடையவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் போடபட்ட பிறகு, நாட்டில் உள்ள சிறு வயது குழந்தைகளுக்கு ஃபைசரின் தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் அங்கீகரித்துள்ளனர். முன்னதாக நவம்பரில், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கபட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. மிகவும் அரிதாக, ஃபைசர் தடுப்பூசி அல்லது மாடர்னாவால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்ட இளம் வயதினர் மற்றும் இளைஞர்கள் தீவிரமான பக்கவிளைவு, இதய வீக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டனர்.
பின்பு தொடர் கண்காணிப்பில் அவர்கள் விரைவாக குணமடைந்தனர். மேலும் தீவிர ஆய்வுக்குப் பிறகு, தடுப்பூசி செலுத்தி கொள்வதால் ஆபத்தை விட நன்மைகள் அதிகமாக இருப்பதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த வார தொடக்கத்தில், இந்திய சுகாதார அமைப்புகள், கோவிட்-19க்கான தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவும் (NEGVAC) மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் (NTAGEI) குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவியல் ஆதாரங்களை ஆலோசித்து வருவதாகவும், பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தன.
கோவிட்-19 தடுப்பூசியின் வேகம் மற்றும் கவரேஜை மத்திய அரசு தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருகிறது. மேலும் மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நவம்பர் 3 ஆம் தேதி முதல் மத்திய அரசாங்கம் 'ஹர் கர் தஸ்தக்' பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் போடாத மக்கள் அடையாளம் காணப்பட்டு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது. கோவிட்-19க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவும், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் அறிவியல் ஆதாரங்களை ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளன.
ALSO READ | துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR