Covid Update: தமிழகத்தில் இன்று (மே,09) 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு, பலி 236
கொரோனா பெருந்தொற்றின் வீரியமான தாக்கம் வியாபித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை: கொரோனா பெருந்தொற்றின் வீரியமான தாக்கம் வியாபித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்றுவரை இல்லாத அளவுக்கு இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 28,897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
Also Read | Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'.. மத்திய அரசின் 'ரியாக்ஷன்'
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,53,790 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் ஒரே நாளில் தொற்று 28,897 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
28,869 வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 29 பேர் உட்பட மொத்தம் 28,897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஒரே நாளில் 7,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 7,130 ஆக உயர்ந்துள்ளது.
Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரம்
கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 236 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 151 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாதவர்களில் 47 பேர் உயிரிழந்தனர்.
12 வயதிற்குபட்ட 1,012 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது சிறார்களுக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 23,515 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 12,20,064 பேர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை 1,44,547 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR