தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635-லிருந்து 813 ஆக உயர்வு... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியபிப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் மொத்தம் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 943 ஆக உள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 


District
Confirmed
 
 
Chennai

55363

Coimbatore

1134

Tiruppur 109
Dindigul 76
Erode 70
Tirunelveli 64
Chengalpattu

353

Namakkal

151

Tiruchirappalli 50
Thiruvallur 49
Thanjavur

348

Madurai 46
Viluppuram

444

Theni 44
Nagapattinam 44
Karur 41
Ranipet 38
Thiruvarur

129

Tenkasi

528

Thoothukkudi 27
Cuddalore 26
Salem 24
Vellore 23
Virudhunagar 19
Tirupathur 17
Kanniyakumari 16
Sivaganga 12
Ramanathapuram 11
The Nilgiris 9
Kancheepuram

19

Tiruvannamalai 8
Perambalur 5
Kallakurichi

25

Ariyalur 3
Pudukkottai 1

நேற்று வரை வீட்டு கண்காணிப்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 1,08,337 ஆக உள்ளது. 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 87,159 ஆகும். வீட்டு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 22,254 பேராகும். அரசு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 5,458 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இன்று மட்டும் 6,060 ரத்த மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. செயற்கை சுவாசக் கருவிகளின் எண்ணிக்கை 3,371 ஆக உயர்ந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 29,074 ஆகும்.