சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் சென்னை சில்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பதால், தீ விபத்து ஏற்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள பகுதி அபாயகரமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை சில்க்ஸ் துணிக் கடையின் கீழ் தளத்தில் பற்றிய தீ வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கடைக்குள் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், கட்டடத்தின் உள் பகுதிகள் இடிந்து விழுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


இன்னும் 2 மணி நேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் கட்டடத்துக்கு அருகே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே உள்ள கடைகளைத் திறக்கவும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து நேரிட்ட பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.


தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். கட்டடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.