தங்க நகை  சீட்டு மூலம் பொது மக்களை மோசடி செய்த புகாரில் குரோம்பேட்டையில் பிரணவ் ஜூவல்லரியில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகத்தில் திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்கிற நகைக்கடை இயங்கி வருகிறது. இதன் இயக்குனர்களாக திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா இருந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பராமரிப்பு காரணமாக அனைத்து பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளும் மூடப்பட்டதால் இதில் நகை சேமிப்பு திட்டம் மூலம் பல்வேறு முதலீடு திட்டங்களில் பணம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் அச்சத்தில் காவல் நிலையங்களில் கடை மூடப்பட்டதாகவும் தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டால் எடுக்கப்படவில்லை என கூறி புகார் அளித்தனர்.  இதில் திருச்சி மற்றும் மதுரையில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 3 மாவட்டங்களில் RSS பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது: நீதிமன்றம் கண்டிப்பு


இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரியின் உரிமையாளர் மதன் இதற்கு விளக்கம் அளிக்கக்கூடிய வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  தான் 100 கோடி ரூபாய் பணத்துடன் தப்பி ஓடியதாக வரும் செய்தி வதந்தி எனவும், பிரணவ் நகைகடைகளை அனைத்திலும் முதலீடு செய்யப்பட்ட தொகை 31 கோடி ரூபாய் மட்டும் தான் எனவும் எனவே என் மீது வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.  எங்களது நிறுவனத்திடம் ஏராளமான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் முறையாக முதலீடு செய்த தொகையைத் தர தயாராக இருப்பதாகவும் உரிமையாளர் மதன் தெரிவித்துள்ளார்.


நாங்கள் எங்கும் ஓடி ஓடி ஒளியவில்லை எனவும் குறிப்பிட்ட நேரத்தில் அனைவருக்கும் அவர்களது பணம் செலுத்தப்படும் எனவும் இது குறித்து காவல்துறையிடம் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுள்ள பிரணவ் ஜூவல்லரி நகைக்கடைகள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர்,  எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் ஒவ்வொரு நகைக்கடைகளாக திறக்கப்படும் முதிர்வுதொகை திருப்பி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்தநிலையில் சென்னை குரோம்பேட்டை மற்றும் திருச்சியில் இருந்து தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருவதன் அடிப்படையில் சென்னைனை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் அதிகாரிகள் குரோம்பேட்டை பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை நேரடியாக சென்று அதிகாரிகள் முன்னிலையில் நகைக் கடையின் கதவை உடைத்து ஆய்வு மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கடையில் நுழையும் போது நகைக்கடையில் ஒரு நகையும் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே நகைக்கடை முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது... பாதிரியாருக்கு வலைவீச்சு... சேகர்பாபு தகவல் - பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ