சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 40 வயதான மல்லிகா என்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் (26.03.2023) இரவு சுமார் 11:30 மணியளவில் தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்து செம்மஞ்சேரி சரக காவல் ஆணையாளர் ரியாசுதீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான மல்லிகாவின் உடலை பார்த்தபோது பெண்ணுறுப்பில் தீவைத்து எரித்தும், அடித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் மல்லிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கொலையான மல்லிகாவின் இரண்டாவது மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தாய் மல்லிகா தனியாக வசித்து வந்ததும், மகன் வேறு வீட்டில் வசித்து வந்ததும், வழக்கம் போல் தாய் வீட்டிற்கு சென்ற போது முகம் மற்றும் தலை முழுதும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சடைந்த பின்பு தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது தெரியவந்தது. 


பின்னர் சம்பவம் குறித்து செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் ரியாசுதீன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து  விசாரணை மேற்கொண்டதில் மல்லிகாவின் முதல் கணவர் முருகன் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததும், அதை தொடர்ந்து இரண்டாவதாக முருகன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வசித்து வந்துள்ளார். இரண்டாவது கணவர் முருகன் மல்லிகாவிற்கு கடந்த 18 வருடங்களுக்கு முன்பு இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டாவது கணவர் முருகன் மல்லிக்காவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். 


இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக சென்னை கண்ணகி நகர் பகுதியில் சேர்ந்த 45-வயதான ஜெயக்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு காரப்பாக்கம் பகுதியில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கவைத்துளார். பின்னர் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: ரஜினி வீட்டிலும் கைவரிசையா? விசாரணை வளையத்தில் ஈஸ்வரி, வெளிவரும் பகீர் தகவல்கள்


ஜெயக்குமார் காட்டிட வேளையில் மேஸ்திரியாக பணிபுரிந்து வந்ததும், அப்பொழுது கட்டிட பணியாளராக பணிபுரிந்து வந்த மல்லிகாவுடன் பழக்கம் ஏற்பட்டதும், பின்னர் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மல்லிகாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் ஜெயக்குமார் மல்லிகா இருவரும் அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 


இந்நிலையில் ஜெயக்குமாரின் நண்பரான ஓட்டுனராக பணிபுரியும் பாண்டியன் என்பவரை மல்லிகா வசிக்கும் வீட்டிற்கு அழைத்து சென்று அறிமுகம் படுத்தியுள்ளார். அதை தொடர்ந்து பாண்டியன் அடிக்கடி மல்லிகா வீட்டிற்கு சென்று வந்தபோது மல்லிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பலமுறை உறவுக்கு மீறிய தொடர்பில் இருந்து வந்துள்ளனர். 


இந்நிலையில் நேற்றைய முன்தினம் இரவு ஜெயகுமார் மல்லிகா வீட்டிற்கு சென்றபோது அங்கு அவருடைய நண்பரான பாண்டியனுடன் மல்லிகா நெருக்கமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். ஜெயகுமாரை பார்த்ததும் மல்லிகா வீட்டை விட்டு பாண்டியன் உடனே வெளியேரியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் சென்ற ஜெயகுமார் மல்லிகாவுடன் பாண்டியன் என்பவர் நெருக்காகமாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பியதும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
பின்னர் மல்லிகாவுடன் சேர்ந்து மது அருந்திய ஜெயக்குமார் பின்னர் மது பாட்டிலால் மல்லிகாவின் பெண்ணுறுப்பில் அடித்துள்ளார். அதை தொடர்ந்து கண்மூடித்தனமாக மல்லிகாவை அடித்து கொலை செய்துள்ளார். 


அதை தொடர்ந்து மது பாட்டிலை உடைத்து மல்லிகாவின் பெண்ணுறுப்பு மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் ஜெயக்குமார் கிளம்பி கண்ணகி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பின்னர் தான் தனிப்படை போலீசார்  சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் மல்லிகாவை கொலை செய்தது தெரியவந்தது. 


பின்னர் ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டாவது கணவரை பிரிந்து ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்த மல்லிகா அவருடைய நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உறவுக்கு மீறிய தொடர்பில் இருந்தது கொலையில் முடிந்த சோகம்.  கள்ளக்காதலால் பிரச்சனையால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓஎம்ஆரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க: திருட்டு சம்பவம்: 4 வருசமா கொஞ்ச கொஞ்சமாக திருடிய பணிப்பெண் கைது! ரூ. 95 லட்சத்தில் நிலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ