திருட்டு சம்பவம்: 4 வருசமா கொஞ்ச கொஞ்சமாக திருடிய பணிப்பெண் கைது! ரூ. 95 லட்சத்தில் நிலம்!

Aishwarya Jewellery Missing Case: கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடிய பணிப்பெண். 95 லட்சம் ரூபாய்க்கு நிலம். கைது செய்த போலீசார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2023, 06:36 PM IST
  • வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என புகார்.
  • 2019 முதல் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி விற்பனை செய்த பணிப்பெண்.
  • அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார்.
திருட்டு சம்பவம்: 4 வருசமா கொஞ்ச கொஞ்சமாக திருடிய பணிப்பெண் கைது!  ரூ. 95 லட்சத்தில் நிலம்! title=

Aishwarya house Jewellery Theft: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என மாறிய போதும் நகைகள் லாக்கரில் இருந்து எடுக்கப்படவில்லை.

நகைகளை லாக்கரில் வைத்திருந்தது தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியும். வீட்டில் பணிபுரியும் பணியாளர்களே நகைகளைத் திருடி இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் வைர நகைகள், நவரத்தினக் கல் மற்றும் 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் 3 நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் நகையை திருடியது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை, பணம் கொள்ளை!

ஈஸ்வரியிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ஆச்சரியமூட்டும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை அவரது கணவர் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். 

மேலும் அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதற்காக வங்கியில் கடன் வாங்கிய ஈஸ்வரி அதனை இரண்டே வருடங்களில் கட்டி முடித்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் வேறு யாரிடமாவது திருடியுள்ளாரா என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது போலீஸ். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

மேலும் படிக்க: 'இப்ப கமலும், ரஜினியும் தான் எனக்கு முன்னோடி...' - சொன்னது டி.ராஜேந்தர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News