புதுச்சேரி கோரிமேடு பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு காவலர் (recuriment divison) ஆள் சேர்ப்பு பிரிவில் காவலராக, மகேஷ் வயது (36) என்பவர் பணி புரிந்து வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில்,  கடந்த சில தினங்களாக அவர் மன அழுத்தில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜிபமர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார். 


இதனிடையே,  புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர்களுக்கான பணியிடங்களை ஆட்சேர்ப்பு முலம்  நிரப்பும் பணி  விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. காவலர்  மகேஷ் சமீபகாலமாக மிகவும் மன உளைச்சலாக இருந்து வந்த நிலையில் இன்று காவலர் பயிற்சி பள்ளிக்கு பணிக்கு வந்த மகேஷ் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த நிலையில் சம்பவ இடத்திலயே பரிதாபமக உயிரிழந்தார். அச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தத மனைவி காவல் நிலையத்தில் சரண்



இதனை கண்ட காவலர்கள் அவரது உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தன்வந்திரி நகர்  போலீசார் காவலர் மகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ALSO READ | கொலையில் முடிந்த தகராறு.. அண்ணனை வெட்டிய தம்பி..!


மேலும் தற்கொலை செய்து கொண்ட காவலர் மகேஷிக்கு மனைவி மற்றும்  நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ ஹரி என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் முழுமையான விசாரணை முடிந்த பின்பே தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்.


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR