கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தத மனைவி காவல் நிலையத்தில் சரண்

ஆத்திரமடைந்த மனைவி கணவர் என்றும் பாராமல் காய்கறி நறுக்கும் கத்தியால் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சராமரியாக குத்தி படுகொலை செய்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 06:10 PM IST
கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தத மனைவி காவல் நிலையத்தில் சரண் title=

தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தத மனைவி காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் நாயக்கன் தோப்பு பகுதியில் ராசாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சந்தோஷ் என்ற கூலித் தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவி சுரேகாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

தினமும் குடித்துவிட்டு மதுபோதையில் வரும் சந்தோஷ், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தினமும் சண்டை இடுவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் இன்று மதுபோதையில் அதேபோன்று தகராறில் ஈடுபட்ட சந்தோஷ் மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அவரது உனது நடத்தையில் சந்தேகம் உள்ளதாக கூறி 4 மாத கர்ப்பிணியான தனது மனைவி சுரேகா விடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

ALSO READ | ஒரகடம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை 

இதில் ஆத்திரமடைந்த சுரேகா கணவர் என்றும் பாராமல் காய்கறி நறுக்கும் கத்தியால் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சராமரியாக குத்தி படுகொலை (Murder) செய்தார். சம்பவ இடத்திலேயே கணவர் சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மனைவி சுரேகா சரணடைந்தார். 

விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் (TN Police) சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | நூதன முறையில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய 4 வாலிபர்கள் கைது! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News