கோவையில் தீபாவளியன்று மதுபானம் அருந்தி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில்  தீபாவளியன்று மதுபானம் அருந்திய 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தற்போது உடற்கூறு ஆய்வறிக்கையில் மதுவில் விஷம் கலந்திருப்பதாக தெரியவந்ததையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


கோவை (Coimbatore) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேரும் தீபாவளிக்கு முந்தைய இரவு முழுதும் குடித்தனர். அவர்கள் மீண்டும் காலையில் 6.30 மணிக்கு  பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்த நிலையில் அடுத்தடுத்து மயங்கி சாலையில் விழுந்தனர். மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே  உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 



ALSO READ: இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை


இறந்தவர்களின் உடல்கள் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு உடல் பாகங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு மூவரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.


பாதி அருந்திய நிலையில் கைப்பற்றபட்ட மதுபான பாட்டில்களையும் கைப்பற்றி பந்தய சாலை காவல் நிலைய போலீஸார் (Police) விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உடற்கூறு ஆய்வின் முடிவு நேற்று வெளியானது அதில் மூவர் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்திருக்கிறது. 


இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பந்தய சாலை காவல் நிலைய போலீசார் பழிவாங்கும் நோக்கில் மதுவில் விஷம் கலந்ததாக அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ராஜசேகர் என்பவரைகைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 


ராஜசேகருக்கும், முருகானந்தத்திற்கும் முன்விரோதம் இருந்ததால் மதுவில் ராஜசேகர் சயனைடு விஷத்தை கலந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஏற்கனவே தீபாவளியன்று மூவர் சாராயம் அருந்தி உயிர் இழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது சாராயத்தில் விஷம் (Poison) கலந்திருந்தது தெரிந்த பின் மக்களை பீதி ஆட்கொண்டுள்ளது.


ALSO READ: சிவகாசி பட்டாசுகள் வெடித்து விபத்து; 2 பேர் படுகாயம், 3 பேர் மாயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR