தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. பாலியல் தொந்தரவு வழக்குகளில் 2019 ஆம் ஆண்டில் 370 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டில் 404 வழக்குகளும் பதிவான நிலையில் 2021 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 442 வழக்குகளாக பதிவாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அண்ணா பல்கலைகழக கலந்தாய்வு : தமிழகம் முழுவதும் 10 இடங்களில்..!


வரதட்சணை வழக்குகள் குறைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் 40 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு 27 வழக்குகள் பதிவாகியுள்ளன. கணவர் மற்றும் அவரது உறவினர்களால் ஏற்படும் கொடுமை வழக்குகள் 2019 ஆம் ஆண்டு 781 வழக்குகள் பதிவாகியிருந்தன. 2021 ஆம் ஆண்டில் அந்த வழக்குகள் மேலும் அதிகரித்து 875 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.  மானபங்க வழக்குகளும் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. 2020 -ம் ஆண்டு - 892 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு 1077 வழக்குகள் பதிவாகியுள்ளது. 


ஒட்டு மொத்தமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2025-ல் இருந்து 2421 வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான தொந்தரவுகள் தொடர்பான வழக்குகளும் அதிகரித்துள்ளன. பாலியல் தொந்தரவு வழக்குகள் 2020 ஆம் ஆண்டு 2229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2021 ஆம் ஆண்டில் 3425 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான இதர வழக்குகளில் கடந்த ஆண்டு 1044 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான ஒட்டுமொத்த வழக்கு எண்ணிக்கை 3090 ஆக இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு அவை மேலும் அதிகரித்து 4469 வழக்குகளாக பதிவாகியிருக்கின்றன. 


மேலும் படிக்க | திமுகவுடன் தொடர்பில் இருக்கும் 2 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் - புதுகுண்டு வீசிய திமுக எம்.பி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR