நான்கரை ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு #JustAsking என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை பற்றி தைரியமாக எதிர்த்து பல கேள்விகளை இவர் மத்திய அரசிடம் கேட்டு வருகிறார்.   


இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில் கருத்தரங்கில் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். கருத்தரங்கில் பேசிய, பிரகாஷ் ராஜ் “ சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலை உள்ளவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். பெரும்பாலான அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புகின்றனர்.


குறிப்பாக பாஜக அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகிறது. என்னை இந்துத்வாவிற்கு எதிரானவன் எனச் சித்தரிக்கின்றனர். ஆனால் எனக்கும் ஹிந்துத்வாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். 
 
கருத்தரங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்திகள் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி படித்தவர்கள் தான் பாமர மக்களை ஏமாற்றி வருக்கிறார்கள். இன்றைய செய்தித்துறை அனைத்துமே அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. பெரும்பாலான தவறான தகவல்களை அரசு தான் பரப்பி வருகிறது. 


இவ்வாறான போலி செய்திகளால் திட்டமிடப்பட்ட குற்றங்கள் நடைபெறுகின்றன. மேலும் இதன் மூலம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற வலதுசாரி அமைப்புகள் முயற்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இதனால் சமூகத்தில் வன்முறை பரப்பப்பட்டு என தெரிவித்துள்ளார்.