சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol-Diesel Price) இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவு கண்டுள்ளது. எண்ணெய் உற்பத்தியாளர்கள் இடையே ஏற்பட்ட விலை யுத்தம் காரணமாக இந்தியாவில் (India) தொடர்ந்து எண்ணெய் விலை (Oil Price) குறைந்து வருகிறது. கடந்த எட்டு மாதங்களில் முதல் முறையாக பெட்ரோல் விலை 71 ரூபாய்க்கு கீழே சரிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒபெக் + கூட்டணி (Opec+ Alliance) சிதைந்த பின்னர், சவுதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடக்கும் விலை யுத்தத்தை அடுத்து சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் 31 சதவீதத்திற்கு மேல் சரிந்தன. 


அதன் காரணமாக கச்சா எண்ணெய் (Crude Oil) இந்திய சந்தையில் ஒரு பீப்பாயில் விலை ரூ.2,200 ஆக குறைந்துள்ளது. இது 1991 வளைகுடாப் போருக்குப் பிறகு கச்சா எண்ணெயின் விலையில் மிகப்பெரிய ஒரு நாள் சரிவு ஆகும். இது முக்கிய காரணம் சவுதி அரேபியாவின் எண்ணெய் விலை குறைப்பு ஆகும்.


மேலும் படிக்க: வரலாறு காணாத கடும் வீழ்ச்சி... தண்ணீரை விட மலிவாகும் கச்சா எண்ணெய்


டெல்லியில், பெட்ரோல் (Petrol) விலை லிட்டருக்கு ரூ .70.59 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 2019 ஜூலை மாதத்துக்கு பிறகு இதுதான் மிகக் குறைவானதாகவும், டீசல் (Diesel) வீதம் ரூ .63.26 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல சென்னையை பொறுத்த வரை நேற்றைய விலையில் இருந்து 31காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல் விலையில் 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.48 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 


கச்சா எண்ணெய் (Crude Oil) விலை உள்நாட்டு சந்தையில் 30 சதவீதத்திற்கும் மேலாக குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 2,200 ரூபாய் அளவுக்கு சென்றதால், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறையக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் வானக ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.