CSK vs RR: சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.  ஏற்கனவே கடந்த வாரம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடைபெற்றது. 
பல வருடங்களுக்கு பிறகு இங்கு போட்டி நடைபெற்றதால் இதனை நேரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.  இருப்பினும் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.  ஆனால் போட்டி நடைபெறும் சமயத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தது.  இதனை பலரும் அப்போதே கேள்வி எழுப்பினர்.  உண்மையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் பிளாக் மார்க்கெட்டில் 5,000 அல்லது அதற்கு மேல் விற்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!


சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளில் 40% மட்டுமே ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது, ஆன்லைன் டிக்கெட்கள் சிறிது நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. சேப்பாக்கத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தும் டிக்கெட்கள் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.  கவுண்டரில் டிக்கெட்கள் வாங்கும் சிலரும் அதனை அதிக விலைக்கு விற்கின்றனர். கவுண்டரில் 1500 ரூபாய்க்கு வாங்கும் ஒரு டிக்கெட்டுக்கு 4,000 முதல் 5,500 வரை வெளியில் விற்பனை செய்கின்றனர். டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகின்றன.



இந்த பிரச்னை குறித்து சமீபத்தில் பேசிய CSKன் CEO காசி விஸ்வநாதன், "மொத்த டிக்கெட்டுகளில் 20% BCCI மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு (TNCA) வழக்கப்படுகிறது. இது தவிர, TNCA (டிவிஷன்) கிளப்புகளுக்கு 13,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே, எங்களால் 15,000 டிக்கெட்டுகளை மட்டுமே ரசிகர்களுக்கு விற்க முடிகிறது, அவை சிறிது நேரத்தில் தீர்ந்து விடுகின்றன.  டிக்கெட்டுகளை ஸ்பான்சர்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என்று விஸ்வநாதன் கூறினார். 


மேலும் படிக்க | ஊட்டிக்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு! இந்த சேவைகள் இல்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ