போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற 5 வயது குழந்தை பலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது ஐந்து வயது மகள் ரட்சிதாவிற்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து வேப்பூர் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவராக சத்தியசீலன் என்பவர், குழந்தை ரட்சிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சைக்குப்பின் வீட்டுக்கு சென்ற குழந்தைக்கு உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து உடனடியாக சிகிச்சை அளித்த சத்தியசீலனிடம் குழந்தையை மீண்டும் கொண்டு வந்து காட்டியுள்ளனர்.
அவர் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த நல்லூர் வட்டார மருத்துவ அதிகாரி குழந்தைக்கு சிகிச்சை அளித்த சத்தியசீலனிடம் விசாரணை செய்துள்ளார். அப்பொழுது சத்தியசீலன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.. இதனையடுத்து வட்டார மருத்துவ அதிகாரி வேப்பூர் காவல் நிலையத்தில் சத்தியசீலன் மீது புகார் அளித்தார்.
மேலும் படிக்க | ஆம்பூரில் பயங்கரம் - சாலையோரம் படுத்துறங்கிய பெண்களுக்கு கத்திகுத்து !
புகாரின் பேரில் சத்தியசீலனின் மருத்துவ சான்றிதழ்களை பரிசோதனை செய்ததில் இங்கிலாந்தில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவரின் சான்றிதழ்களை மாற்றம் செய்து 5 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்திருக்கிறார். இதனை அடுத்து வேப்பூர் போலீசார் போலி மருத்துவர் சத்தியசீலன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு தேடி வருகின்றனர். போலி மருத்துவர் சிகிச்சை பார்த்து 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 'அதிமுக நிர்வாகி' தலைமறைவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR