வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகக்கவசம் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. கடைகள், பிற வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.


அதன் படி, வணிக நிறுவனங்கள், கடைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:


  • மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது. 

  • கடைக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும். 

  • அனைத்து கடைகளின் முகப்பிலும் சானிடைசர், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும். 

  • கடை உரிமையாளர்கள், ஊழியர்கள்கள் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். 

  • கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்படுவதோடு, தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

  • இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. 


READ | விரைவில் அனைத்து தளங்களிலும் WhatsApp... வருகிறது புதிய வசதி...


தமிழகத்தில் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களுக்கும் அரசு சில கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.... 


  • உணவகங்களில் நாளை முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டுள்ளது.

  • உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

  • உணவகங்களில் நுழைவதற்கு முன் கைகளை கழுவ சோப்பு, சானிடைசர் வைக்க வேண்டும்

  • ஏசி பயன்படுத்த கூடாது, ஜன்னல்கள் திறந்து காற்றோட்டமாக இருக்க வேண்டும்

  • சாப்பிடும் டேபிளுக்கு இடையில் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.