முதலமைச்சரின் சைக்கிள் பயணம் நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை...
முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய சைக்கிள் பயணம், நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை தொடர்ந்தது...
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய சைக்கிள் பயணம், நீலாங்கரையில் இருந்து கோவளம் வரை தொடர்ந்தது... இன்று காலை சைக்கிளிங் சென்றபோது மாண்புமிகு முதலமைச்சர் பள்ளி மாணவர் ஒருவரிடம் உரையாடினார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் அவரது உடற்பயிற்சி மீதான அக்கறை என்று சொன்னால் அது மிகையாகாது.
தனது வீட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபடும் முதலமைச்சர் (CM Stalin) தினசரி காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார்.
வாரத்தில் மூன்று நாட்கள் காலை வேளையில் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் போது, அவரது மருமகன் சபரீசனும் அவருடன் செல்வார். இன்று நீலாங்கரையில் உள்ள தனது மகளின் வீட்டில் இருந்து சைக்கிளிங் பயிற்சியை தொடங்கிய முதலமைச்சர் கோவளம் வரை சைக்கிளில் சென்றார். அதன்பிறகு, அங்கிருந்து கார் மூலம் தனது வீட்டுக்கு சென்றார்.
முதலமைச்சரின் சைக்கிள் செல்லும் வழியில் பொதுமக்கள் அவரைப் பார்த்து கையசைத்து, மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
வழக்கமாக முதலமைச்சர் காலை நேரத்தில் உடற்பயிற்சிக்காக வெளியில் செல்லும்போது, அவர் தேநீர் அருந்தும் கடைகள் மற்றும் இளைப்பாறும் இடங்களில் இளைஞர்களும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது வழக்கம்.
ALSO READ | நீட் தேர்வில் இருந்து விலக்கு விவகாரம்! இன்று அனைத்து கட்சி கூட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR