ஊட்டி போல மாறிய சென்னை : காரணம் இதுதான்
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் காரணமாக சென்னை குளுகுளு என மாறியிருக்கிறது.
பங்குனி தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பின்னர் சித்திரை தொடங்கி அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருவதால் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வானிலை ஆய்வு மையமும் மதிய வேளையில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடை மழை வராதா என மக்கள் காத்திருந்த வேளையில்தான் உருவாகியிருக்கிறது அசானி புயல்.
மேலும் படிக்க | தக்காளி காய்ச்சல்- அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் அச்சம் வேண்டாம்
வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி வடமேற்காக நகர்ந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக மாறியிருக்கும் அசானி வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையருகே நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அசானி புயலின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. வாட்டி வதைத்த வெயிலில் இருந்து சற்று ஓய்வு கிடைத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காலை முதல் சென்னையில் வெயில் குறைந்து ஊட்டி போல காணப்படுகிறது.
மேலும படிக்க | அசானி புயல்: இந்த மாநிலங்களில் கன மழை பெய்யும்
நேற்று நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 7 செண்டி மீட்டர் மழையும், ஊட்டியில் 6 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பொள்ளாச்சி, பெருந்துறையில் தலா 5 செண்டி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR