ஃபானி புயல்: தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதி!!
ஃபானி புயலையொட்டி தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஃபானி புயலையொட்டி தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
தமிழகத்தை மிரட்டி வந்த ஃபானி புயல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி திசை திரும்பியுள்ள வேளையிலும் இந்த புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த வகையில் தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழத்துக்கு ரூ.309 கோடி ரூபாயும், ஆந்திரா 200.25 கோடி ரூபாயும், ஒடிசா 340.87 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.