கஜா புயல் எதிரொலி: 3 மாவட்டங்களில் அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு...
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு...
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு...
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர பலவேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், சில மாவட்டங்களில் நிவாரணப்பணி நடைபெற்று வருவதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைகழகம் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (22-11-2018), நாளை மறுநாள் (23-11-2018) நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்று மாவட்டங்களை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.