Cyclone Mandous Live: மிரட்டும் மாண்டஸ் புயல்: 24 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று லீவ் - முழு விவரம்
Cyclone Mandous Live Updates: மாண்டஸ் புயலையொட்டி தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலானது காரைக்காலில் இருந்து சுமார் 270 கிமீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருக்கிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே டிசம்பர் 09ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும். மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும். இன்று நள்ளிரவு கரையை கடக்கும்போது அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முதலே கனமழை ஆரம்பித்துவிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மொத்தம் 24 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “சென்னைm காஞ்சிபுரம்,கடலூர்,ராணிப்பேட்டை,விழுப்புரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,வேலூர்,திருவாரூர்,பெரம்பலூர்,தஞ்சாவூர்,அரியலூர்,மயிலாடுதுறை,புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி,சேலம்,நாமக்கல்,திருவண்ணாமலை,தருமபுரி,நாகப்பட்டினம்,திருச்சி,திருப்பத்தூர்,சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தலைமை செயலாளர் இறையன்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடரின் போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மின்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து பல் துறை மண்டலக் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்௧கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ