Cyclone Mandous Live: மாண்டஸ் புயலின் நிலை என்ன?... வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
Cyclone Mandous Live Updates: மாண்டஸ் புயலில் சமீபத்திய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது "மாண்டஸ்" புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டவிற்கு இடையே 09.12.2022 (இன்று) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக 11ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முதலே கனமழை தொடங்கியிருப்பதாலும், புயலின் தீவிரத்தன்மை அதிகம் இருக்கும் என கூறப்பட்டுள்ளதாலும் மக்கள் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். 6 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயலின் சமீபத்திய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “காரைக்காலில் இருந்து சுமார் 270 கிமீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கே மாண்டஸ் புயக்ல் நிலைகொண்டிருக்கிறது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே டிசம்பர் 09ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும். மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ