கவலை வேண்டாம்...!! தமிழகத்திற்கு ரெட் அலர்ட் இல்லை: வானிலை மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நோக்கி நகருவதால் தமிழகத்திற்கு ரெட் பாதிப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கில் சுமார் 1500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 30 ஆம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும். வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திராவில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றவர்கள் வரும் 28 ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபனி புயலானது வடதமிழகம் நோக்கி நகருவதால், புயலின் வேகத்தை பொறுத்தே காற்றோ அல்லது மழையோ இருக்கும். சில இடங்களில் கனமழை பெய்யலாம். வானிலை ஆய்வு மையம் மூலம் தமிழகத்திற்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. காற்றின் வேகம் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.