வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து தமிழகத்தை தாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து அடுத்த 72 மணி நேரத்திற்குள் தமிழகம், ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா நோக்கி புயல் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி அடுத்த 72 மணிநேரத்திற்குள் மாரும் எனவும், இதன் காரணமாக சென்னை, சுற்றுப்பகுதிகளில் நாளை (டிசம்பர் 15) கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இன்று (டிசம்பர் 14) வங்கக் கடலோரப் பகுதியின் மத்திய பகுதிகளிலும், தென்மேற்குப் பகுதியிலும், தென்கிழக்கு கடற்கரையிலுள்ள வங்காள விரிகுடாவிலும், கடல் மட்டத்தில் சீற்றம் மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட உயிரை பலி வாங்கிய கஜா புயலில் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது மேலும் ஒரு புயல் தமிழகத்தை தாக்கவுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இமயமலை பகுதியில் பெய்யும் பனி காரணமாகவும், மியான்மரில் இருந்து இழுக்கும் குளிர்ந்த காற்று காரணமாகவும் புயலின் போக்கு மாற வாய்ப்புள்ளது. புயலின் திசை மாறும் பட்சத்தில் மசூலிபட்டினம் - காக்கிநாடா இடையே நர்சபூர் அருகே டிசம்பர் 16-ம் தேதி புயல் கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.