விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்... 'ஒத்துழைக்காத காவல்துறை' - பொங்கிய பிரேமலதா!

Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 11, 2024, 05:59 PM IST
  • விருதை தமிழர்களுக்கு சமர்பிக்கிறேன் - பிரேமலதா
  • விமான நிலையம் டூ கோயம்பேடு பேரணிக்கு அனுமதி பெற்றிருந்தோம் - பிரேமலதா
  • ஆனால் காவல்துறை பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை - பிரேமலதா
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்... 'ஒத்துழைக்காத காவல்துறை' - பொங்கிய பிரேமலதா! title=

Vijayakanth Padma Bushan Award Latest Updates: மறைந்த தேமுதிக  தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் வழங்கப்பட்டது. விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு பின்னர் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழா கடந்த மே 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. 

விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விருது பெற்ற விஜயகாந்த் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லித் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா  நடைபெற்றது. பாராட்டு விழாவை முடித்துக் கொண்டு தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் விஜய பிரபாகரன், துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். 

பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய விருதுடன் சென்னை விமானம் வந்த பிரேமலதா விஜயகாந்திற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதினை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விமான நிலையத்தில் வெளியே வந்த பின்பு தொண்டர்களிடம் காண்பித்தார்.

மேலும் படிக்க | 16 கோடி ரூபாய் சிகிச்சை... தொண்டைக்குழியில் துளையுடன் குழந்தை: உதவிக்காக காத்திருக்கும் பெற்றோர்

அதன் பின்பு திறந்தவெளி வாகனத்தில் ஏறி தொண்டர்கள் அனைவருக்கும் பத்ம பூஷன் விருதினை பிரித்து ஒன்றன்பின் ஒன்றாக பிரேமலதா விஜயகாந்த் காண்பித்தார். அதன்பின்பு திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே தொண்டர்களுக்கு கையசைத்தபடி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்திருக்கும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். 

'தமிழர்களுக்கு சமர்பிக்கிறேன்...'

விமான நிலையம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்பொழுது அவர் கூறியதாவது,"இந்த விருதை கேப்டனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் மீது அன்பு கொண்ட தமிழர்களுக்கு இந்த உயரிய பத்ம பூஷன் விருதை சமர்ப்பிக்கிறேன். அவர் வந்து இந்த விருதை பெற்றிருந்தால் அது இன்னும் பெருமையாக இருந்திருக்கும். அவர் இல்லாத இந்த நேரத்தில் மிகுந்த வேதனையாக இருக்கிறது" என்றார்.

விமான நிலையத்தில் தள்ளு முள்ளு

பிரேமலதா விஜயகாந்த் வருகையை ஒட்டி அவரை வரவேற்பதற்காக அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் சென்னை விமான நிலையத்திற்கு வரவேற்பதற்காக வந்த போது அவரை உள்ளே அனுமதிக்காததால் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை உள்ளே அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை

தொடர்ந்து, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த நினைவிடத்தில் பத்ம பூஷன் விருதை பிரேமலதா சமர்பித்து மரியாதை செய்தார். விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,"பத்மபூஷன் விருது கிடைத்தது மகிழ்ச்சி. விருதை கேப்டன் நினைவிடத்தில் சமர்ப்பித்து உள்ளேன். எல்லாப் புகழும் கேப்டனுக்கே... கேப்டன் விண்ணுலகில் இருந்து நம்மை ஆசிர்வதிப்பார்" என்றார். பத்ம பூஷன் விருதுக்கு பதிலாக பாரத ரத்னா என தவறுதலாக பிரேமலதா மாற்றிக்கூறினார்.

பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை

தொடர்ந்து பேசிய அவர்,"மிகப்பெரிய வலியோடு தான் கேப்டனுக்கு சமர்பித்துள்ளேன். காலம் தாழ்ந்து கிடைத்தாலும் இந்த விருதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். ஏற்கனவே காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று தான் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு பேரணியாக வந்தோம். ஆனால் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. டெல்லியில் உள்ள தமிழ் சங்கத்திற்கு ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபாய் விஜயகாந்த் பிறந்தநாள் அன்று தேமுதிக சார்பில் வழங்க உள்ளோம்.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News