ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான சிறப்பு செலவுக் கண்காணிப்பாளராக வருமான வரி முன்னாள் இயக்குநர் ஜெனரல் டி முரளிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக முரளிகுமாரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர் சென்னை வருமான வரி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



நாடுமுழுவதும் மக்களவை அறிவிக்கப்பட்ட நிலையில், கணக்கிடப்படாத பெரிய அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிரப்பித்தது.


இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5-ஆம் நாள் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களை தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைகண்காணிப்பு குழுக்கள் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.44 லட்சத்து 32 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் வாணியம்பாடியில் ரூ.89,41,800 மதிப்புள்ள தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.