குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை மின்வாரிய அலுவலகம் அருகில் வசித்து வந்தவர் 52 வயதான குமார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் துப்பு துலங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரது மகளே ஆள் வைத்து தந்தையை கொன்றிருக்கும் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வயரிங் மற்றும் பிளம்பர் வேலைகளை செய்து வந்த சங்கர், ரீத்தாபுரம் பேரூராட்சி 15-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். 


மனைவி ரெத்னாவதி (46),தீபாவதி (26), சோனியாவதி (23) என இரு மகள்களுடன் வசித்து வந்தார். மகள் தீபாவதி கல்லூரியில் எம்.எட். படித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி இரவு குமார் வீட்டில் இருந்த குமார் சங்கரை, மர்மநபர் ஒருவர் வெளியே அழைத்து சென்றார். வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற போது மர்மநபருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. 


அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமார் சங்கரை அந்த ஆசாமி சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த குமார் சங்கர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் (Murder of Father).


ALSO READ | கணவன் தைத்த ஜாக்கெட் பிடிக்காததால் மனைவி தற்கொலை!


இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் சிக்கியது.


அதைத்தொடர்ந்து இந்த கொலையில் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது (Police Squad). இந்த தனிப்படையினர், கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.


அப்போது திடீர் திருப்பமாக குமார் சங்கர் கொலையில் அவருடைய மகள் தீபாவதி மற்றும் மூவர்புரத்தை சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


திக்கணங்கோட்டில் உள்ள தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் படிக்க சென்றபோது தீபாவதிக்கும் மூவர்புரத்தை சேர்ந்த நர்சிங் மாணவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு நாள் தீபாவதி, தன் தந்தை தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தங்களை அடித்து கொடுமை படுத்துகிறார் என்று அவரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 


READ ALSO | 11 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்


அப்போது அவருக்கு, மாணவர் ஆறுதல் கூறியுள்ளார். இந்த நிலையில் தன் தந்தையை தீர்த்து கட்ட தீபாவதி முடிவு செய்து, தனது எண்ணத்தை மாணவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்போது கீழ திக்கணங்கோடு இல்ல விளாகத்தை சேர்ந்த ஸ்ரீமுகுந்தன் (21)என்பவரை அழைத்து அவர் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றலாம் என்று மாணவர் கூறியுள்ளார்.


அதன்படி மாணவர், ஸ்ரீமுகுந்தனை சந்தித்து, தனது தோழியின் தந்தையை கொலை செய்ய கூலியாக ரூ.60 ஆயிரம் பேசியுள்ளார். மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரத்தையும் ஸ்ரீமுகுந்தனிடம் கொடுத்துள்ளனர்.



இவர்களின் திட்டப்படி குமார் சங்கரை வீட்டில் இருந்து ஸ்ரீமுகுந்தன் அழைத்து சென்று தீர்த்து கட்டிவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தீபாவதி, மாணவர் ஆகியோரை போலீசார்அதிரடியாக கைது செய்தனர். அதே சமயம் கொலை செய்து விட்டு உவரியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீமுகுந்தனையும் மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.


இந்த வழக்கில் கைதான ஸ்ரீமுகுந்தனுக்கு கூலிப்படையுடன் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தி.மு.க. பிரமுகரை ஆள் வைத்து மகள் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ALSO READ | கணவன்-மனைவி பிரச்சனையால் 5 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR