2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.  அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் துணை தலைவரும் CSK அணியினுடைய உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், BCCI செயலாளர் ஜெய்ஷா, IPL தலைவர் பிரிஜேஷ் பட்டேல் மற்றும் TNCA தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. CSK அணியின் மஞ்சள் நிற 7-ம் எண் ஜெர்சியில் M.K.STLAIN என எழுதப்பட்டிதிருந்த நினைவுப்பரிசினை தோனி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கினார். மேலும் CSK அணியினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி முதல்வர் அவர்களை பாராட்டினார்.நிகழ்ச்சியில் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டதற்கு ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் தோனி போல ஒரு கேப்டன் இந்திய அணிக்கு கிடைத்த பெருமை எனவும் பேசினார். அதன்பின் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் எனது கடைசி போட்டி சென்னையில் தான் நடந்தது மீண்டும் நான் சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.



அதன் பின் பேசிய தோனி சென்னையும், தமிழ்நாடும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திதிருக்கிறது என்றும் தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி CSK அணிக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும். கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள் எனக்கூறி தனது கடைசி T20 போட்டி சென்னையில் நடக்கும் என நம்புவதாகவும் கூறினார். விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலைமச்சர் ஸ்டாலின் தான் மாநிலத்தின் முதல்வராக வரவில்லை தோனியின் ரசிகனாக விழாவிற்கு வந்திருப்பதாகவும் தான் மட்டுமல்ல மறைத்த தலைவர் கருணாநிதியும் தோனியின் ரசிகர்தான் அதுமட்டுமல்ல எனது குடும்பமே தோனியின் ரசிகர்கள் தான் என்றார்.



நெருக்கடியான சூழ்நிலைகளில் தோனியின் தலைமையை சிறப்பானதாக செயல்படுத்தியிருக்கிறார் என்றும் CSK கோப்பையை வென்றது என்பதைவிட பெருமையை தக்கவைத்திருக்கிறது. தமிழர்கள் அனைவரும் பச்சை தமிழர்கள் என்றால் தோனி மஞ்சள் தமிழர், தோனி தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை எங்கூறிய முதலமைச்சர் எளிமையான இடத்தில் இருந்து வந்து உச்சம் தொட்டதால் தோனியின் மீது மறைத்த கலைஞருக்கு பாசம் அதிகம் எனவும் இலக்கும், உழைப்பும் இருந்தால் சிறந்த வெற்றிகளை அடையலாம் இது விளையாட்டிற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் என பேசிய முதலமைச்சர் தான் சென்னை மேயராக இருந்தபோது கிரிக்கெட் விளையாடிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டவர், இறுதியாக Dear Dhoni... We want you to lead  CSK for many more season என இருமுறை கூறி தனது உரையை முடித்தார். மேலும் இந்த பாராட்டு விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான ராசிகர்களும் கலந்து கொண்டனர்.


ALSO READ சென்னை அணிக்கு இன்று பாராட்டு விழா- மாஸாக வந்த தோனி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR