சென்னை: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து கட்சி தலைவர்களும் தீர்மானத்தில் பேசினர்.


மறைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் நரசிம்மன்,நவநீதகிருஷ்ண பாண்டியன்,கண்ணையன்,கோ.சி. மணி, பாலுச்சாமி, ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது


தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, சோ. ராமசாமி , பாலமுரளிகிருஷ்ணா, பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டோருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டன.


புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு தமிழக சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம் செய்யப்பட்டு.


தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டுவர பாடுபட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.


தமது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் புரட்சித்தலைவி அம்மா- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.


புரட்சித்தலைவி அம்மா பூவுலகத்தில் இருந்து மறைந்தாலும், இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்கிறார்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.


சவால்களை வென்று சரித்திரம் படைத்தவர்  புரட்சித்தலைவி அம்மா- முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம்.


உச்சங்களின் உச்சத்தை தொட்ட உலக அதிசயம் அம்மா, விண்தொட்ட வெற்றிகளை தம் விவேகத்தால் பெற்றவர் அம்மா- சபாநாயகர் தனபால்.


எல்லையில்லா வெற்றிகளின் தொகுப்பாகத் திகழ்ந்தவர் அம்மா. அறிவுக்கூர்மை, இலக்கை நோக்கிய பயணம் அம்மாவின் சிறப்பு அம்சங்கள்- சபாநாயகர் தனபால்.


புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்.