தனிக்கட்சி துவங்க நாளை முடிவு: டிடிவி தினகரன்!
தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என ஆர்.கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசியா தினகரன் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும். இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது, சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது, நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளது.
இதையடுத்து, அதிமுகவின் ஒன்றைரை கோடி தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் எங்களுடன் உள்ளனர். எனவே இத்தனை தொண்டர்களும் பேரவை இன்றி செயல்பட இயலாது. இதுதொடர்பாக நான் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் பேசிவிட்டு வந்தேன். அவரும் உனக்கு சரியென்று தோன்றுவதை செய் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடிவடிக்கையை மேற்கொள்வேன் என்று கூறினார்.