காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறுத்தி வைக்கக்கோரி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறுத்தி வைக்கக்கோரி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க பரிந்துரை செய்யும், இந்த மாசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் இந்த மாசோதா நிறைவேற்றப்பட்டது. இது அக்டோபர் மாதம் முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது.
இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க திமுக ஏற்பாடு செய்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், அனைத்து கட்சி கூட்டம் நிறைவடைந்ததும், செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காஷ்மீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது எனக்கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறுத்தி வைக்கக்கோரி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி குழுவை காஷ்மீருக்கு அனுப்ப வேண்டும். அங்கு அந்த மக்களுடன் கலந்து பேசி ஆலோசனை செய்த பின்னர், முடிவெடுக்க வேண்டும். ஏற்கனவே காஷ்மீரில் இருந்த அச்சுறுத்தலை விட மேலும் அச்சுறுத்தல் கூடியுள்ளது. மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என ஸ்டாலின் கூறினார்.