எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி
![எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/01/17/112380-deepa-mgr.jpg?itok=jxN-yd_r)
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை அவர் மெரினாவிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஆயிரக்கணக்கான தீபா ஆதரவாளர்களான அங்கு குவிந்தனர்.
அவர் வருவதை முன்னிட்டு அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மெரீனா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மெரீனா சாலையில் பதட்டம் நிலவி வருகிறது.
அதேநேரம், இன்று காலை 11 மணியளவில் தீபா தனது தி.நகர் இல்லத்தில் நிருபர்களை சந்திக்க உள்ளார். அப்போது புதிய கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய தகவல்களை அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.