சென்னை செய்தியாளர் சந்திப்பில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், துல்லியத் தாக்குதல் முக்கியத்துவத்தினை குறித்து விளக்கியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராணுவ முகாமில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கவே 2016-ஆம் ஆண்டு துல்லியத்த தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துல்லியத் தாக்குதல் என்பது முக்கியமான ஒன்று, இத்தினத்தினை கொண்டாடும் வகையில் பராக்கிரம் பர்வ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 



துல்லியத் தாக்குதலுக்கான காரணம், அது எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் 32 நகரங்களில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 



2016-ஆம் ஆண்டு துல்லியத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, போர் இல்லாத சூழ்நிலையிலும் ராணுவ முகாமில் நம் நாட்டு வீரர்கள் ஏன் தங்கியுள்ளனர் என பல கேள்விகளுக்கு இந்த காணொளி பதில் அளிக்கும்.


அண்டை நாட்டின் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் வந்திருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களிடம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டாம். இடமளிக்க வேண்டாம் எனக்கூறியுள்ளோம். இருப்பினும், அதனை அந்நாடு நிறுத்தவில்லை. 


இதன் காரணமாக தான் இந்திய ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகளின் பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாத்தை ஊ்குவிக்கும் அண்டை நாட்டின போக்கிற்கு இந்த முறையிலும் பதிலடி கொடுக்க முடிந்தது, என தெரிவித்துள்ளார்.


மேலும் ரபேல் ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேட்கையில்... ரபேல் விவகாரம் குறித்து பார்லிமென்டில் 4 முறைவிளக்கம் அளிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தமே பின்பற்றப்படுகிறது. ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தது காங்கிரஸ் அரசு தான். எனவே இந்த ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.