சுட்டெரிக்கும் வெப்பத்தால் பள்ளியின் விடுமுறை நாட்கள் தள்ளிப் போகுமா?
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி வெயில் இன்றுடன் முடிவடைகிறது.
ஆனாலும் பகலில் அனல் காற்று வீசுவதால் வெப்பம் மக்களை வாட்டியெடுத்து வருகிறது. எனவே பள்ளிகளின் கோடை விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்படுமா என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்ப்பில் உள்ளன.
ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு நாள் அதிகரிக்கப்படுமா என இதுவரை அரசு தரப்பில் எந்தவித உத்தரவு வரவில்லை.
கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் அவர்கள் " அக்னி வெயில் முடிவடைந்துள்ள நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் இன்னும் கடுமையாக இருப்பதால் கோடை விடுமுறையை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றார்.
பள்ளி ஆசிரியர்களும் வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில்கொண்டு பள்ளியின் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.