சென்னையில் உள்ள கமல் ஹாசனின் இல்லத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் கெஜ்ரிவாலை அக்ஷரா ஹாசன் வரவேற்றார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் உள்ள கமல் ஹாசனின் இல்லத்திற்கு வந்தார். நடிகர் கமல்ஹாசனை, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.



 


நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். இதற்கு அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர். இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகிறது.


கேரளத்தில் வெற்றிகரமாக ஓராண்டு ஆட்சியை கடந்த மே மாதம் நிறைவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசையும் அவர் பாராட்டினார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராய் விஜயனையும் சந்தித்தார். 


இதையொட்டி நடிகர் கமல் ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவும் வாய்ப்பிருப்பதாக ஊகம் எழுந்துள்ளது. கேரள முதல்வரை சந்திக்க சென்றபோது, தான் அம்மாநில அரசியலை கற்க வந்துள்ளதாக தெரிவித்தார் கமல். மேலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் நடிகர் கமல் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் சென்னை வந்த கெஜ்ரிவாலை, கமல் மகள் அக்ஷரா ஹாசன், விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். இதன் பின்னர், கெஜ்ரிவால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வீட்டில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.