இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் டெல்லி போலீசார் நேற்று சென்னை வந்து தினகரன் இல்லம் சென்று ஏப்ரல் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனை கொடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் முயற்சி செய்தது வெளியானது. இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தரா என்பவனை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தினகரன் தரப்பில் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் நேற்று சென்னை வருவதாக இருந்தது. அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ள படி, சனிக்கிழமைக்குள் டெல்லியில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


இதனை தொடர்ந்து சனிக்கிழமை டெல்லியில் ஆஜராவா? ஆஜரான பின் கைது செய்யப்படுவாரா? இல்லை அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக வேறு எங்கேயோ புறப்பட்டுச் செல்வாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


 


இந்நிலையில் சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திரஷா ஆகியோர் நேற்று இரவு சென்னை வந்தனர். பின்னர் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீடு சென்று அவரிடம் வரும் ஏப்ரல் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.