ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் கெடுபிடி: அரசின் ஆக்சன் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டிற்கு உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி இன்று (ஏப். 27) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில், மண்ணெண்ணெய் அளவு 59 ஆயிரத்து 812 கிலோ லிட்டராக இருந்தது.
மண்ணெண்ணெய் தேவை எவ்வளவு தெரியுமா?
இது 2021ல் 7 ஆயிரத்து 510 கிலோ லிட்டராக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டரில் இருந்தது. தற்போது, 2 ஆயிரத்து 712 கிலோ லிட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மண்ணெண்ணையை தமிழ்நாடு அரசு தான் ஏதோ குறைத்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசுக்கு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது. தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, 29 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
மலை பகுதி மக்களுக்கு சிரமம்
தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கக்கூடிய நிலையில், மண்ணெண்ணெய் வழங்கக்கூடிய அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசின் மண்ணெண்ணெய் விநியோகம் குறைந்துள்ளத்தால் ஏழை எளிய மக்கள் பாதிப்புகுள்ளாகி உள்ளனர். குறிப்பாக மலைப் பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதற்காக, இரண்டு முறை கடிதம் எழுதியும் அதை கருத்தில் கொள்ளவில்லை.
பொருளாதார நெருக்கடி, நிதிச்சுமைகளுக்கு இடையேயும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி பொது விநியோக திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருள்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல கோதுமை அளவும் 30 ஆயிரத்து 636 மெட்ரிக் டன் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 8 ஆயிரத்து 132 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.
கோதுமை கொள்முதல்
கடந்தாண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்தாண்டு தற்போது வரை 35 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என்ற சாதனையை எட்டுவோம்.
கோதுமை தட்டுப்பாட்டை போக்க வரும் ஆண்டுகளில் இருந்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்வதற்கு அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம். நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் வழங்கும் திட்டம் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அடுத்த மாதம் சோதனை முறையில் துவங்கப்பட உள்ளது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ