பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும்!!
பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் மலை சார்ந்த பகுதிகளில் அதிகம் நிலவி வருகிறது. இதனால் உறைபனி அடுத்த 2 இரவுகள் தொடரும். மேலும் காற்றில் ஏற்பட்ட சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
இதேபோல், மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை.
சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும். இந்த பனியானது தமிழகத்தில் பிப்ரவரி 2வது வாரம் வரை தொடரும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.