சாதிகளுக்கு எதிரான படமாக தேவர்மகன்-2 அமையும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம், நாமக்கல்லில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்...


#MeToo விவகாரம் குறித்து கேட்டதற்கு.. பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


தேவர் சமுதயாத்திற்கான படமாக தேவர்மகன்-2 அமையுமா என செய்தியாளர் கேட்டதற்கு... தேவர் மகன்-2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படமாக இருக்கும். தேவர்மகன் படத்தின் தொடர்சியாக வெளிவரவுள்ள இத்திரைப்படத்தின் பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு... இது பக்தர்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம், வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் கருத்து கூறுவது முறையல்ல என தெரிவித்துள்ளார்.


எனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை யாரும் தடுக்க முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்ப்பேன். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.