தரிசனம் செய்ய வந்த பாம்பு - பக்தர்கள் அதிர்ச்சி
கோயிலுக்குள் பாம்பு இருந்ததால் சாமி கும்பிட வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிபுரம் நகராட்சிக்குட்பட்ட ராசிபுரம் பிரிவு ரோடு பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ சொக்கலப்பன் கோயில் அமைந்திருக்கிறது.
இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் செவ்வாய் கிழமையும், வெள்ளி கிழமையும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
அந்தவகையில் இன்று காலையிலும் கோயிலில் சாமி கும்பிடுவதற்கு பக்தர்கள் சென்றனர். அப்போது கோயில் வளாகத்துக்குள் பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.
மேலும் படிக்க | நான் கோமாவில் இல்லை: calm-ஆ போஸ்ட் போட்ட நித்தியானந்தா, பதட்டத்தில் பக்தர்கள்
பாம்பை மீட்ட பிறகு அவர்கள் ஆத்தூர் வனத்துறையிடம் அதனை ஒப்படைத்தனர். பிடிபட்ட பாம்பை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் ஐயங்கார் காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விட்டனர்.
கோயில் வளாகத்துக்குள் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தை கேட்டு பிரதமர் மோடி பயந்துவிட்டார் - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR