தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதியது. இதில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி அடிப்பகுதியில் இரண்டு கார்கள் மாட்டிக்கொண்டதில் விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. மேலும் இரட்டை பாலத்தை உடைத்து கொண்டு ஒரு லாரி பாலத்தின் கீழே விழுந்து நொறுங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் இருந்த மூன்று பேர் படுகாயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி நடுவில் சிக்கி இருந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்து சுமார் ஏழு பேர் தீப்பிடித்து எரிந்து நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது இதில் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களின் நிலை மீட்பு பணி முடிந்த பிறகு தான் தெரிய வரும். இந்த விபத்தினால் போக்குவரத்து கடுமையாக தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | கூட்டணி யாருடன்? பேச்சுவார்த்தை எப்போது? அண்ணாமலை விளக்கம்!


சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் காவல்துறையினர் விரைந்து சென்று  மீட்டுப் பணியிலும் போக்குவரத்தை சரி செய்ய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களின் விபரங்கள் முழுமையாக தெரியவில்லை மீட்பு பணிகள் முடிந்து பின்பு தெரியவரும் என கூறப்படுகிறது.


உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு:


இந்த விபத்து, தாறுமாறாக கார் ஓட்டி சென்றதால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | இன்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செயல்படாது - அமைச்சர் சேகர்பாபு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ