தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா செல்லாமல் அவரது உடல் சிகிச்சைக்காக சென்றதாக மக்கள் கூறுகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடியில் பேட்டி அளித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி பகுதியில் புதியதாக துவங்கப்பட்ட அனுகிரஹா ஜவுளிக்கடையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து சின்னமாரியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Marina Air Show: 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்?! கதறி அழுத பெண்... இதுவரை 5 பேர் பலி


தொடர்ந்து எடப்பாடி அரசு பயணியர் மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் நடைப்பெற்ற வான்வெளி சாகச நிகழ்விற்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததே விலை மதிக்க முடியாத உயிரிழப்பிற்கு காரணம் என்றும், விமான சாகச நிகழ்விற்கு அழைப்பு விடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பதால் இதற்கு  அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்தியாவிலேயே மிகச்சிறந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு தண்ணீர் அதிமுக அரசு கொண்டு வந்தது. அந்த தண்ணீரை சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லும் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதற்காக நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடரும் எனவும் தெரிவித்தார்.


சேலம் மாவட்டத்திலேயே மாணவ செல்வங்கள் போதைக்கு அடிமையாக்கி வருவதை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும், ஈரோட்டில் ஒரு தனியார் கல்லூரி தாளாளர் சாலையில் சென்ற போது மாணவர்கள் கூட்டமாக இருப்பதை கண்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்து போதை பொருட்கள் விற்பனை செய்ததை தடுத்தார். தொடர்ந்து அந்த தாளாளுக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்ததாகவும் அதற்கும் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் போதை பொருட்கள் அமோகமாக விற்பனை நடைப்பெற்று வருகிறது என குற்றம் சாட்டினார். அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு ஆண்டாக சம்பளம் தராத திமுக அரசை வலியுறுத்துவோம்.


சென்னை மாநகரகத்தில் அதிமுக அரசு 1240 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர்வடிகால் அமைக்கப்பட்டது.  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த திட்டத்தை முழுமையாக தொடர்ந்து நிறைவேற்ற வில்லை எனவும், மெட்ரோ திட்டம் கட்டம் 2 சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 63 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அதிமுக ஆட்சி கொண்டு வந்தது, ஆனால் திமுக கிடப்பில் போட்டது. மத்திய அரசிடம் அதிமுக முறையாக அணுகி நல்ல திட்டங்களை கொண்டு வந்தது ஆனால் திமுக அரசு என்ன புதிய திட்டம் கொண்டு வந்தது. பல லட்சம் கோடி கடன் வாங்கி என்ன புதிய திட்டம் கொண்டு வந்தது என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை அமெரிக்கா அழைத்து சென்று 17 நாட்கள் தங்கி 7 ஆயிரம் கோடியில் தொழில் முதலீடு ஈர்த்ததாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டிற்கு செல்லாமல் ஸ்டாலின் உடற்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதாக பொதுமக்கள் கூறுகின்றனர் எனவும் பேட்டியளித்தார்.


மேலும் படிக்க | மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ