பொன்.ராதாகிருஷ்ணன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பொதுகூட்டத்தில் பேசிய அவர் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.


பொதுகூட்டத்தில் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்., திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகன். திமுக-காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ என்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஜீரோ.  ஆட்சியாளர்கள் தங்கள் சாதனையாக பேச எதுவும் இல்லாததால், எங்களை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.


மேலும் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிறைவேற்றினாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.



நாகர்கோவில் நகருக்கு சுற்றுச்சாலை அமைப்பேன் என்ற வாக்குறுதியை அளித்த அவர் அதனை செயல்படுத்தினாரா? கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பேன். காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் போன்ற என வாக்குறுதிகளை கொடுத்த அவர் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 


---மக்களவை தேர்தல் 2019---


நாடுமுவதும் மக்களவை தேர்தல் இம்மாதம் 11-ஆம் நாள் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.


மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் வேட்பாளர் பெயர் அறிவித்தல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்  வசந்தகுமாரை ஆதரித்து வாக்குசேகரித்தார்.