தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று முதல்வரை சந்திக்கின்றனர்
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் இன்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 34 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தென்காசி தொகுதி எம்.பி., வசந்தி முருகேசனும் நேற்று காலை தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரத்தில் அவையை நடத்து வதற்காக 6 மாற்றுத் தலைவர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் இன்று மாலை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.