பெங்களூரு புறப்பட்டார் டி.டி.வி.தினகரன்
டிடிவி தினகரன் சசிகலாவை இன்று பெங்களுர் சிறையில் சந்திக்க புறப்பட்டார்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் இந்த வழக்கில் சிக்கிய மேலும் மூன்று வருடம் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமின் கோரி, டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த டெல்லி கோர்ட் டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று சிறையில் சந்திக்க பெங்களூருக்கு புறப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று மதியம் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.