சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சென்ற முறை டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் அளித்தவர்கள் பலரும் தொப்பி சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, ஒரே சின்னத்தை பலரும் கேட்டால் குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் தனக்கு "தொப்பி" சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது . இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளி வைத்தார்.


இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் "தொப்பி" சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தினகரனின் கோரிக்கை டெல்லி ஐகோர்ட் நிராகரத்தது. தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என டெல்லி ஐகோர்ட் கூறிவிட்டது.